இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: சிந்து, பிரனாய் கால்இறுதிக்கு தகுதி சாய்னா, சமீர் வர்மா தோல்வி


இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: சிந்து, பிரனாய் கால்இறுதிக்கு தகுதி சாய்னா, சமீர் வர்மா தோல்வி
x
தினத்தந்தி 5 July 2018 9:15 PM GMT (Updated: 5 July 2018 8:49 PM GMT)

மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது.

ஜகர்தா,

மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21–17, 21–14 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். நேற்று சிந்துவுக்கு 23–வது வயது பிறந்தது. இந்த வெற்றி அவருக்கு பிறந்த நாள் பரிசாக அமைந்தது. மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 18–21, 15–21 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை சென் யுபியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 21–23, 21–15, 21–13 என்ற செட் கணக்கில் சீன தைபே வீரர் வாங் சு வெய்யை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா 15–21, 14–21 என்ற நேர்செட்டில் நம்பர் ஒன் வீரர் விக்டர் ஆக்சல்சென்னிடம் (டென்மார்க்) தோல்வி கண்டு நடையை கட்டினார்.


Next Story