பிற விளையாட்டு

உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தங்கம் வென்ற தீபா கர்மாகருக்கு பிரதமர் மோடி வாழ்த்து + "||" + PM Modi congratulates Dipa Karmakar on gold medal feat

உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தங்கம் வென்ற தீபா கர்மாகருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தங்கம் வென்ற தீபா கர்மாகருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தங்கம் வென்ற தீபா கர்மாகருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். #DipaKarmakar #PMModi
புதுடெல்லி, 


துருக்கியில் நடந்த உலக சேலஞ்ச் கோப்பைக்கான ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர் ‘வால்ட்’ பிரிவில் அற்புதமாக செயல்பட்டு 14.150 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் புரோடுனோவா என்ற ஆபத்து நிறைந்த ஜிம்னாஸ்டிக் பிரிவில் நூழிலையில் பதக்கத்தை தவறவிட்டார். எனினும், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

 4-வது இடத்தை பிடித்த பிறகு, பயிற்சியின் போது தீபாவிற்கு முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது முழங்கால் பகுதியில் எலும்புகளை இணைக்கும் ஆன்டிரியர் கிருசியேட் லிகமன்ட் (ஏசிஎல்) எனப்படும் தசைநார் கிழிந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆபத்தானதாகக் கருதப்படும் அந்த காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட தீபா, தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார். முழங்கால் காயமோ, அதன் காரணமாக மேற்கொண்ட அறுவை சிகிச்சையோ தனது செயல்பாடுகளில் பின்னடைவை ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார். அதனை நிரூபிக்கும் வகையில் இப்போது பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தங்கம் வென்ற தீபா கர்மாகருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 

டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘தீபா கர்மாகரை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. உலக சேலஞ்ச் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். இந்த வெற்றி தங்களின் விடாமுயற்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். தன்னை பாராட்டிய பிரதமருக்கு, தீபா கர்மாகர் டுவிட்டர் மூலம் பதிலளித்துள்ளார். அந்த செய்தியில், ‘ஊக்கம் அளிக்கும் உங்களது வார்த்தைகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 

நான் கடினமாக உழைத்து நாட்டுக்கு இன்னும் நிறைய வெற்றிகளை தேடிக் கொடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.