பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி: கடினமான பிரிவில் சிந்து, சாய்னா + "||" + World Badminton Tournament: Sindu, Saina in the difficult category

உலக பேட்மிண்டன் போட்டி: கடினமான பிரிவில் சிந்து, சாய்னா

உலக பேட்மிண்டன் போட்டி: கடினமான பிரிவில் சிந்து, சாய்னா
24–வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் வருகிற 30–ந் தேதி தொடங்குகிறது.

நன்ஜிங், 

24–வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் வருகிற 30–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்காக அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கடினமான பிரிவில் இடம் பிடித்துள்ளனர். இருவருக்கும் நேரடியாக 2–வது சுற்றில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிந்து 3–வது சுற்றுக்கு முன்னேறினால் உலக தரவரிசையில் 9–வது இடத்தில் உள்ள சுங் ஜி ஹூனை (தென்கொரியா) சந்திக்க நேரிடலாம். அவர் கால்இறுதிக்கு தகுதி பெற்றால் நடப்பு சாம்பியன் நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) எதிர்கொள்ள வேண்டியது வரலாம். இதேபோல் சாய்னா 3–வது சுற்றுக்குள் நுழைந்தால் 4–ம் நிலை வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) எதிர்கொள்ள வேண்டியது வரக்கூடும். அதில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்திக்க வேண்டிய நிலை வரக்கூடும்.


அதிகம் வாசிக்கப்பட்டவை