பிற விளையாட்டு

சென்னை மாவட்ட ஜூனியர் கபடி போட்டி நாளை நடக்கிறது + "||" + Chennai District Junior Kabaddi Tournament Tomorrow is going on

சென்னை மாவட்ட ஜூனியர் கபடி போட்டி நாளை நடக்கிறது

சென்னை மாவட்ட ஜூனியர் கபடி போட்டி நாளை நடக்கிறது
சென்னை மாவட்ட ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி அசோக்நகர் மாந்தோப்பு காலனியில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

சென்னை, 

சென்னை மாவட்ட ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி அசோக்நகர் மாந்தோப்பு காலனியில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து, திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3–ந் தேதி முதல் 5–ந் தேதி வரை நடைபெறும் 45–வது மாநில ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான சென்னை மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு செய்யப்படும். மாவட்ட ஜூனியர் கபடி போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் 20 வயதுக்குள்ளும், உடல் எடை 70 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்க செயலாளர் கோல்டு எம்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.