பிற விளையாட்டு

ஜூனியர் ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம் + "||" + Junior Asian Wrestling: 3 silver and 1 bronze for India

ஜூனியர் ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்

ஜூனியர் ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்
ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணி 3 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. #JuniorAsianWrestlingChampionship
புதுடெல்லி,

புதுடெல்லியில் ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று ப்ரீஸ்டைல் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் 57 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் நவீன், உஸ்பெக்கிஸ்தானின் குலோம்ஜான் அப்துல்லோவிடம் தோல்வியடைந்து வெள்ளிபதக்கம் வென்றார்.


மற்றொரு ஆட்டமான, 70 கிலோ பிரிவில் இந்தியாவின் விஷால் காளிராமன், ஈரானின் அமீர் ஹொசைனிடம் தோல்வியடைந்து வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார். இதேபோல் இந்தியாவின் சச்சின் கிரி இறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதில் 65 கிலோ எடைப் பிரிவில் துர்க்மேனிஸ்தானின் பெர்மன் ஹோம்மடோவை வீழ்த்தி இந்திய வீரர் கரண் வெண்கலம் வென்றார்.

இதன்மூலம் இந்த போட்டிகளில் இந்திய அணி, 3 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 42.1 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் இலக்கை தகர்த்து இந்தியா அபார வெற்றி
முதலாவது ஒருநாள் போட்டியில் 42.1 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் இலக்கை தகர்த்து இந்தியா அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, ரோகித் ஷர்மா சதம் கடந்து அபாரம்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடி காட்டி வருகிறது.
3. இந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சிறிசேனா கூறவில்லை: இலங்கை அரசு விளக்கம்
இந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சிறிசேனா கூறவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
4. நட்புறவு கால்பந்து: இந்தியா - சீனா அணிகள் இன்று மோதல்
நட்புறவு கால்பந்து போட்டியில், இந்தியா மற்றும் சீனா அணிகள் இன்று மோத உள்ளன.
5. பாரா ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு மேலும் 5 தங்கப்பதக்கம்
பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா ஒரே நாளில் 5 தங்கப்பதக்கம் வென்றது.