உலக ஜூனியர் ஸ்குவாஷ்: எகிப்து வீரர், வீராங்கனை ‘சாம்பியன்’


உலக ஜூனியர் ஸ்குவாஷ்: எகிப்து வீரர், வீராங்கனை ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 23 July 2018 10:39 PM GMT (Updated: 23 July 2018 10:39 PM GMT)

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து வீரர் மற்றும் வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

சென்னை,

13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் எகிப்து வீரர் மோஸ்தபா அசல் 11-7, 13-11, 11-4 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் மார்வன் டாரெக்கை (எகிப்து) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ரோவன் ரெடா அராபி (எகிப்து) 11-4, 11-9, 10-12, 11-9 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஹனியா எல் ஹம்மாமியை தோற்கடித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். உலக ஜூனியர் அணிகள் சாம்பியன்ஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா உள்பட 24 நாடுகள் கலந்து கொள்கின்றன.

Next Story