பிற விளையாட்டு

உலக ஜூனியர் ஸ்குவாஷ்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்திய அணி + "||" + World Junior Squash: Indian team falling to Pakistan

உலக ஜூனியர் ஸ்குவாஷ்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்திய அணி

உலக ஜூனியர் ஸ்குவாஷ்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்திய அணி
உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.
சென்னை,

13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று அணிகளுக்கான பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுடன் மோதியது. முதல் இரு ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராகுல் பாய்தா, யாஷ் பேட் ஆகியோர் தோல்வி அடைந்தனர். கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் வீர் சோட்ரானி 12-10, 11-5 என்ற நேர் செட் கணக்கில் பாகிஸ்தானின் முகமது உஜேரை தோற்கடித்து ஆறுதல் அளித்தார். முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது. எகிப்து, மலேசியா, இங்கிலாந்து, கனடா அணிகளும் கால்இறுதியை எட்டின.