ஊக்க மருந்து விவகாரம்: ரஷிய தடகள வீரர் இடைநீக்கம்


ஊக்க மருந்து விவகாரம்: ரஷிய தடகள வீரர் இடைநீக்கம்
x
தினத்தந்தி 3 Aug 2018 9:00 PM GMT (Updated: 3 Aug 2018 8:50 PM GMT)

ரஷியாவை சேர்ந்த முன்னணி உயரம் தாண்டுதல் வீரரான டேனில் லைசென்கோவை இடைநீக்கம் செய்து சர்வதேச தடகள சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மொனாக்கோ,

ரஷியாவை சேர்ந்த முன்னணி உயரம் தாண்டுதல் வீரரான டேனில் லைசென்கோவை இடைநீக்கம் செய்து சர்வதேச தடகள சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊக்க மருந்து சர்ச்சை காரணமாக ரஷிய தடகள வீரர்கள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இவர் உள்பட சிலருக்கு சர்வதேச போட்டியில் பொதுவான வீரர்கள் என்ற அடிப்படையில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. போட்டி இல்லாத காலத்தில் ஊக்க மருந்து சோதனை செய்வதற்கு வசதியாக வீரர்கள் தாங்கள் தங்கி இருக்கும் இடத்தை உலக ஊக்க மருந்து தடுப்பு கழகத்துக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் டேனில் லைசென்கோ தான் தங்கி இருக்கும் இடத்தை ஊக்க மருந்து தடுப்பு கழகத்துக்கு தெரிவிக்கவில்லை. இதனால் அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 21 வயதான டேனில் லைசென்கோ முந்தைய மாதம் மொனாக்கோவில் நடந்த டைமண்ட் லீக் போட்டியில் 2.40 மீட்டர் உயரம் தாண்டி இருந்தார். கடந்த ஆண்டு நடந்த உலக தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கமும், இந்த ஆண்டு நடந்த உலக உள்ளரங்க தடகள போட்டியில் தங்கப்பதக்கமும், வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story