பிற விளையாட்டு

முன்னாள் உலக சாம்பியனான கென்யா தடகள வீரர் விபத்தில் பலி + "||" + Former World Champion Kenya athlete killed in crash

முன்னாள் உலக சாம்பியனான கென்யா தடகள வீரர் விபத்தில் பலி

முன்னாள் உலக சாம்பியனான கென்யா தடகள வீரர் விபத்தில் பலி
முன்னாள் உலக சாம்பியனான கென்யா தடகள வீரர் விபத்தில் பலியானார்.
நைரோபி,

பீஜிங்கில் 2015-ம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கென்யாவை சேர்ந்த நிகோலஸ் பெட் தங்கப்பதக்கம் வென்றார். 28 வயதான நிகோலஸ் பெட் கென்யாவின் வடகிழக்கு பகுதியில் நடந்த ஒரு கார் விபத்தில் பலியானார். இந்த தகவலை வெளியிட்டுள்ள கென்யா விளையாட்டு அமைச்சகம் அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளது.