பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
எகிப்து அணியின் கோல் கீப்பர் எசாம் எல் ஹடாரி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
*தென்ஆப்பிரிக்கா -இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் நேற்று நடந்தது. மழையால் 39 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது. குசல் பெரேரா (51 ரன்), திசரா பெரேரா (51 ரன்), ஷனகா (65 ரன்) அரைசதம் விளாசினர். பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்திருந்த போது மறுபடியும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

*எகிப்து அணியின் கோல் கீப்பர் எசாம் எல் -ஹடாரி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 45 வயதான ஹடாரி எகிப்து அணிக்காக 159 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். சமீபத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடிய அவர், உலக கோப்பை போட்டியில் அதிக வயதில் பங்கேற்றவர் என்ற சிறப்பை பெற்றார்.