பிற விளையாட்டு

முதல் தங்கத்தை வென்றது சீனா + "||" + China won the first gold

முதல் தங்கத்தை வென்றது சீனா

முதல் தங்கத்தை வென்றது சீனா
18–வது ஆசிய விளையாட்டின் முதல் தங்கப்பதக்கத்தை சீனா தட்டிச்சென்றது.

ஜகர்தா, 

18–வது ஆசிய விளையாட்டின் முதல் தங்கப்பதக்கத்தை சீனா தட்டிச்சென்றது. தற்காப்பு கலைகளில் ஒன்றான வுசூ விளையாட்டில் ஆண்களுக்கான சாங்குயான் பிரிவில், களத்தில் துள்ளி குதித்தும், பல்வேறு கோணங்களில் உடலை வளைத்து நெளித்தும் சாகசம் காட்டிய சீன வீரர் சன் பெயான் 9.75 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். இந்தோனேஷிய வீரர் எட்கர் சேவியர் மார்வெலோ 9.72 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்திய வீரர்கள் அஞ்சுல் நாம்தேவ் (5–வது இடம்), சுராஜ்சிங் மயங்லம்பம்(10–வது இடம்) ஏமாற்றம் அளித்தனர்.