பிற விளையாட்டு

வுசூ விளையாட்டில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதி + "||" + Vusu game 4 medals to India

வுசூ விளையாட்டில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதி

வுசூ விளையாட்டில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதி
வுசூ விளையாட்டில் இந்தியாவுக்கு, 4 பதக்கங்கள் கிடைப்பது உறுதியானது.
ஜகர்தா,

ஆசிய விளையாட்டில் வுசூ போட்டியில் இந்திய வீரர்கள் நேற்று வெகுவாக ஆதிக்கம் செலுத்தினர். தற்காப்பு கலைகளில் ஒன்றான வுசூ விளையாட்டில் சான்டா பிரிவுகளில் இந்திய வீரர்கள் களம் கண்டனர். குத்துச்சண்டை பாணியில் விளையாடப்படும் இந்த பிரிவில் கையால் குத்துவிடுவதுடன் காலாலும் உதைத்து இடறி விடுவார்கள். இதில் நரேந்தர் கிரிவால் (65 கிலோ), சூர்யா பானு பர்தாப் சிங் (60 கிலோ), சந்தோஷ்குமார் (56 கிலோ) மற்றும் பெண்களில் ரோஷிபினி தேவி (60 கிலோ) ஆகிய இந்தியர்கள் தங்களது கால்இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியதோடு குறைந்தது வெண்கலப்பதக்கத்தையும் உறுதி செய்தனர். இவர்களுக்கான அரைஇறுதி பந்தயங்கள் இன்று நடக்கிறது.
தொடர்புடைய செய்திகள்

1. ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களாகவே தேர்வு செய்தோம்: டாசால்ட் நிறுவன சிஇஓ விளக்கம்
ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களாகவே தேர்வு செய்தோம் என்று டாசால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
2. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது - ரகுராம்ராஜன் கருத்து
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது என ரகுராம்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
3. ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து பாக்.கவலை: இந்தியா பதிலடி
ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து கவலை தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
4. இலங்கை நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல்: அமெரிக்கா கருத்து
இலங்கையில் உச்ச கட்ட அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், அமெரிக்கா கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
5. ஆப்கன் தலீபான்களுடன் முதல் முறையாக பேச்சு நடத்தும் இந்தியா
ஆப்கன் தலீபான்களுடன் முதல் முறையாக இந்தியா அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.