பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: 15 வயது இந்திய வீரர் வெள்ளி வென்றார் + "||" + Asian Games 2018: at 15, Shardul Vihan wins silver in men’s double trap

ஆசிய விளையாட்டு போட்டி: 15 வயது இந்திய வீரர் வெள்ளி வென்றார்

ஆசிய விளையாட்டு போட்டி: 15 வயது இந்திய வீரர்  வெள்ளி வென்றார்
ஆசிய விளையாட்டு போட்டி 15 வயது இந்திய சிறுவன் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி வென்றார். #AsianGames2018


 இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில். இன்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான டபுள் டிரப் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்திய அணி சார்பில் பங்கு பெற்ற 15 வயதே ஆன ஷர்துல் விஹான்  73 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். 34 வயதான ஹியுன்வூ ஷின் 74 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஷர்துல் விஹான் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார்.

கத்தார் வீரர் ஹமாத் அலி 53 புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் வென்றார். இந்த பதக்கம் மூலம் இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.