ஆசிய விளையாட்டு போட்டி: பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்


ஆசிய விளையாட்டு போட்டி: பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
x
தினத்தந்தி 24 Aug 2018 9:10 AM GMT (Updated: 24 Aug 2018 9:10 AM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது

ஜகார்தா

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக்-யேவ்சயவ் ஜோடியை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, இறுதியில் 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. 

இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதுதவிர 5 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது.

இன்று ஒரே நாளில் இந்தியா 2  தங்கம் வென்று உள்ளது.ஆசிய விளையாட்டு பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்து உள்ளது. இறுதிப்போட்டியில் ஈரான் அணியிடம் 24-க்கு 27 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது.


Next Story