பிற விளையாட்டு

6 தங்கம் வென்று ஜப்பான் நீச்சல் வீராங்கனை சாதனை + "||" + Japanese swimmer who won gold Record

6 தங்கம் வென்று ஜப்பான் நீச்சல் வீராங்கனை சாதனை

6 தங்கம் வென்று ஜப்பான் நீச்சல் வீராங்கனை சாதனை
6 தங்க பதக்கங்களை வென்று ஜப்பான் நீச்சல் வீராங்கனை சாதனை படைத்தார்.
ஜகர்தா,

18-வது ஆசிய விளையாட்டில் ஜப்பான் நீச்சல் வீராங்கனை 18 வயதான ரிகாகோ இகீ, நீச்சல் குளத்திற்குள் பாய்ந்தால் பதக்கத்தோடு தான் வெளியே வருகிறார். 50 மீட்டர், 100 மீட்டர் பட்டர்பிளை, 50 மீட்டர், 100 மீட்டர் பிரிஸ்டைல், 4 x 100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சல், 4 x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சல் என்று 6 தங்கப்பதக்கங்களை அள்ளியிருக்கிறார். இதன் மூலம் ஒரு ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். நடப்பு ஆசிய விளையாட்டில் நீச்சலில் மட்டும் ஜப்பான் 19 தங்கம் உள்பட 52 பதக்கம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.


வடகொரிய துப்பாக்கி சுடுதல் வீரர் சோ ஜின்-மான் 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 7 தங்கம் வென்றிருந்தார். ஒரு ஆசிய விளையாட்டில் அதிக தங்கம் வென்ற சாதனையாளராக அவர் நீடிக்கிறார்.தொடர்புடைய செய்திகள்

1. காட்பாடியில் ஆசிரியையிடம் நூதனமுறையில் 16 பவுன் சங்கிலி அபேஸ் போலீஸ் போன்று நடித்து மர்மநபர்கள் துணிகரம்
காட்பாடியில் போலீஸ் போன்று நடித்து நூதனமுறையில் அரசுப்பள்ளி ஆசிரியையிடம் 16 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
2. பாளையங்கோட்டை அருகே துணிகரம் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
பாளையங்கோட்டை அருகே வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
3. திருக்கோவிலூரில் சம்பவம் : நகைக்கடையில் ரூ.5½ லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு - 2 ஊழியர்கள் கைது
திருக்கோவிலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.5½ லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை திருடிய ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.45 லட்சம் தங்கம் பறிமுதல்
இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.45 லட்சம் தங்கத்தை மத்திய சுங்க இலாகா வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
5. மலேசியாவில் இருந்து சென்னைக்கு எமர்ஜென்சி விளக்கில் மறைத்து ரூ.36 லட்சம் தங்கம் கடத்தல்
மலேசியாவில் இருந்து சென்னைக்கு எமர்ஜென்சி விளக்குகளில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கஇலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.