ஆசிய விளையாட்டு போட்டி; 3,000 மீ தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் சுதா சிங் வெள்ளி வென்றார்


ஆசிய விளையாட்டு போட்டி; 3,000 மீ தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் சுதா சிங் வெள்ளி வென்றார்
x
தினத்தந்தி 27 Aug 2018 3:03 PM GMT (Updated: 27 Aug 2018 3:03 PM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியின் 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சுதா சிங் இன்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடந்து வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டியின் 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் தொலைதூர ஓட்டப்பந்தய வீராங்கனை சுதா சிங் 9 நிமிடம் 40.03 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இந்த போட்டியில் பஹ்ரைனின் வின்பிரெட் யாவி 9 நிமிடம் 36.52 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.  வியட்நாமின் தி ஓன்ஹ் எங்குயென் (9 நிமிடம் 43.83 விநாடி) வெண்கலம் வென்றார்.

கடந்த 2010ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியானது அறிமுகம் செய்யப்பட்டது.  இதில் சுதா சிங் தங்க பதக்கம் வென்றார்.

Next Story