பிற விளையாட்டு

தீபிகா, ஜோஷ்னா, சவுரவ் கோஷலுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை + "||" + Deepika, Joshna, Sourav Ghoshal Rs 20 lakh per annum

தீபிகா, ஜோஷ்னா, சவுரவ் கோஷலுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை

தீபிகா, ஜோஷ்னா, சவுரவ் கோஷலுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்ற தீபிகா, ஜோஷ்னா, சவுரவ் கோஷலுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பு
சென்னை,

இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சவுரவ் கோஷல் வெண்கலப்பதக்கமும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர். வெண்கலப்பதக்கம் வென்ற சவுரவ் கோஷல், தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார்.

அத்துடன் பதக்கம் வென்று சாதனை படைத்த 3 பேருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதம் எழுதி இருக்கிறார். அதில், ‘நாட்டுக்கு பெருமை சேர்ந்த 3 பேரையும் தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துவதாகவும், வருங்காலங்களில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டுவதாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.