பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் சாதித்த தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை முதல்–அமைச்சர் அறிவிப்பு + "||" + Asian Games Rs 90 lakh incentive for Tamil Nadu players

ஆசிய விளையாட்டு போட்டியில் சாதித்த தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை முதல்–அமைச்சர் அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் சாதித்த தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை முதல்–அமைச்சர் அறிவிப்பு
இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

சென்னை, 

இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இதேபோல் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் அணிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், அமல்ராஜ், சத்யன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் பெற்றது. வெள்ளி வென்ற ஆரோக்ய ராஜீவ்க்கு ரூ.30 லட்சமும், வெண்கலப்பதக்கம் வென்ற சரத் கமல், அமல்ராஜ், சத்யன் ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். அத்துடன் பதக்கம் வென்ற 4 பேருக்கும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.