பிற விளையாட்டு

ஹெப்டத்லானில் தங்கம் வென்ற ஸ்வப்னாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு மற்றும் வேலை வாய்ப்பு + "||" + In heptatlan Gold swatched to Swapna Rs 10 lakh gift and job opportunity

ஹெப்டத்லானில் தங்கம் வென்ற ஸ்வப்னாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு மற்றும் வேலை வாய்ப்பு

ஹெப்டத்லானில் தங்கம் வென்ற ஸ்வப்னாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு மற்றும் வேலை வாய்ப்பு
ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனையான மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

கொல்கத்தா, 

ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனையான மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர் ஓட்டம் உள்பட 7 பந்தயங்கள் அடங்கிய ஹெப்டத்லானில் மகுடம் சூடிய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை படைத்த அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தாயகம் திரும்பியதும் அவருக்கு பாராட்டு விழா நடத்த அந்த மாநில தடகள சங்கம் முடிவு செய்துள்ளது.

ரிக்ஷா தொழிலாளியின் மகளான 21 வயதான ஸ்வப்னா அளித்த பேட்டியில், ‘எனக்கு இரண்டு கால்களிலும் தலா 6 விரல்கள் இருப்பதால் எந்த ஷூ அணிந்து விளையாடினாலும் வலி அதிகமாக இருக்கும். பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் ஷூவை அணிந்தாலும் வலிக்கத்தான் செய்கிறது. எனவே எனது கால்களுக்கு ஏற்ப பிரத்யேக ஷூவை ஏற்பாடு செய்து தருவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

கன்னத்தில் பேன்டேஜ் ஒட்டியிருந்தது ஏன் என்று கேட்ட போது, ‘நான் நிறைய சாக்லெட்டுகள் சாப்பிட்டதால் போட்டிக்கு முன்பாக கடுமையான பல் வலி ஏற்பட்டது. வலியை குறைப்பதற்காகத்தான் பேன்டேஜ் ஒட்டியிருந்தேன். வலி அதிகம் இருந்ததால் முதல் நாளில் களம் இறங்கி சாதிக்க முடியுமா? என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது. எப்படியோ ஒரு வழியாக சமாளித்து விட்டேன்’ என்றார்.தொடர்புடைய செய்திகள்

1. தென் மண்டல தடகளம்: தமிழக வீரர் அரவிந்த் தங்கம் வென்றார்
30–வது தென்மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று தொடங்கியது.
2. ஆண்கள் ஆக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு குத்துச்சண்டை மற்றும் சீட்டு விளையாட்டு மூலம் மேலும் இரு தங்கப்பதக்கம் கிட்டியது.
3. தடகளத்தில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 தங்கம் 200 மீட்டர் ஓட்டத்தில் டுட்டீ சந்துக்கு வெள்ளிப்பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் நேற்று இந்தியாவுக்கு டிரிபிள் ஜம்ப் வீரர் அர்பிந்தர்சிங்கும், ஹெப்டத்லான் வீராங்கனை ஸ்வப்னாவும் தங்கப்பதக்கம் வென்றுத் தந்து வரலாறு படைத்தனர்.
4. கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு 2–வது இடம்: 800 மீட்டர் ஓட்டத்தில் மன்ஜித் சிங் தங்கம் வென்று அசத்தல்
ஆசிய விளையாட்டில் 800 மீட்டர் ஓடடத்தில் இந்திய வீரர்கள் மன்ஜித் சிங், ஜான்சன் முறையே முதல் 2 இடங்களை பிடித்து தங்க மற்றும் வெள்ளிப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தனர்.
5. உளுந்தூர்பேட்டை அருகே பட்டப்பகலில் பட்டதாரி பெண்ணை தாக்கி 6 பவுன் நகை பறிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே பட்டதாரி பெண்ணை தாக்கி 6 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.