பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டுப்போட்டி: இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது + "||" + Asian Games: Indian women's squash team advanced to the final

ஆசிய விளையாட்டுப்போட்டி: இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

ஆசிய விளையாட்டுப்போட்டி: இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. #AsianGames2018
ஜகார்த்தா,

ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான ஸ்குவாஷ் அரையிறுதி போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் இன்று மோதின.

பெண்கள் அணிகளுக்கான ஸ்குவாஷ் பி பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி முதல் நான்கு போட்டியில் ஈரான், தாய்லாந்து, இந்தோனேஷியா, சீனா அணிகளை வீழ்த்தி ஏற்கனவே அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்திருந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1-2 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.


பின்னர் லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி 5 போட்டியில் 4 வெற்றி, 1 தோல்வி என 8 புள்ளிகளுடன் பி பிரிவில் 2வது இடம் பிடித்தது. இதன்மூலம் பி பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற இந்திய அணி, ஏ பிரிவில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியனான மலேசியாவை இன்று எதிர்கொண்டது. இதில் இந்திய விராங்கணைகளின் சிறப்பான ஆட்டத்தால் 0-2 என்ற புள்ளிக்கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.



தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய விளையாட்டுப்போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018 #EdappadiPalanisamy
2. ஆசிய விளையாட்டுப்போட்டி: பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
ஆசிய விளையாட்டுப்போட்டி தொடரில், பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் பிவி சிந்து தோல்வி அடைந்தார்.
3. பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018
4. ஆசிய விளையாட்டுப்போட்டி: மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் - இந்தியாவின் டூட்டி சந்த் வெள்ளி வென்றார்
ஆசிய விளையாட்டுப்போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் டூட்டி சந்த் வெள்ளி பதக்கம் வென்றார். #AsianGames2018
5. ஆசிய விளையாட்டுப்போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
ஆசிய விளையாட்டுப்போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.