பிற விளையாட்டு

து ளி க ள் + "||" + Thulikal

து ளி க ள்

து ளி க ள்
வருகிற 15–ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

*வருகிற 15–ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அஸ்கார் ஆப்கன் தலைமையிலான அந்த அணியில் ரஷித்கான், முகமது நபி, முஜீப் ரகுமான், ‌ஷராபுத்தீன் அஷ்ரப் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

*இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14–வது சுற்றான இத்தாலி கிராண்ட்பிரி அங்குள்ள மோன்ஸா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.720 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி காரில் சீறிப்பாய்ந்த 20 வீரர்களில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் முதலாவதாக வந்தார். இந்த சீசனில் அவரது 6–வது வெற்றி இதுவாகும். 14 சுற்று முடிவில் ஹாமில்டன் 256 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 226 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி சிங்கப்பூரில் வருகிற 16–ந்தேதி நடக்கிறது.

*ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் 35 வயதான சீன் எர்வின் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. து ளி க ள்
*இத்தாலி கிளப் அணிகளுக்கான ‘செரி ஏ’ போட்டியில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் யுவன்டெஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் சாஸ்சுலோ அணியை வீழ்த்தியது.
2. துளிகள்
பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14–ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
3. துளிகள்
உலக பெண்கள் அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
4. துளிகள்
காந்தம், மெக்னீசியா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
5. துளிகள்
இந்த ஆண்டில் மார்ச் மாதத்தில் ஒருநாள் போட்டி அந்தஸ்தை பெற்ற நேபாள கிரிக்கெட் அணி, நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது.