பிற விளையாட்டு

போபால் வீதிகளில் பிச்சை எடுக்கும் தேசிய பாரா-தடகள வீரர் + "||" + National level para-athlete Manmohan Singh Lodhi forced to beg on Bhopal streets

போபால் வீதிகளில் பிச்சை எடுக்கும் தேசிய பாரா-தடகள வீரர்

போபால் வீதிகளில் பிச்சை எடுக்கும்  தேசிய  பாரா-தடகள வீரர்
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் வீதிகளில் தேசிய பாரா தடகள வீரர் மன்மோகன் சிங் லோதி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
போபால்

தேசிய பாரா தடகள வீரர் மன்மோகன் சிங் லோதி,  இவர் அரசு சார்பில் அரசு வேலை தருவதாக  அதிகாரிகளால்  வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தார். ஆனால்  இப்போது அவரது குடும்பத்திற்கு வாழ்வாதாரத்திற்காக  போபால் தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டு உள்ளார்.

தடகள வீரர்  மன்மோகன் சிங்,  2017 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் ஓடி தனது திறமையை நிருபித்து உள்ளார். வாக்களிக்கப்பட்ட வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு கடந்த ஒரு வருட காலத்தில்  நான்கு முறை  முதல் மந்திரியை  சந்தித்த போதிலும்,அவருக்கு  அரசாங்கத்தின் பக்கத்திலிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை.

நான்  நான்கு முறை முதல் அமைச்சரை சந்தித்தேன், அவர் வாக்குறுதிகளை அளித்தார், ஆனால் அதை எந்த ஒருவரும் நிறைவேற்றவில்லை. நான் வருமானம் இன்றி உள்ளேன். என் குடும்பத்தை நடத்துவதற்கு பணம் தேவை. முதலமைச்சர் எனக்கு உதவ முன் வரவில்லை என்றதால்  வீதிகளில் பிச்சை எடுப்பதன் மூலம் தனது வாழ்வாதாரத்தை ஓட்டி வருவதாக அவர் கூறினார்.