பிற விளையாட்டு

உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால்-க்கு தங்கப்பதக்கம் + "||" + World shooter: Indian spinner Om Prakash Mitwarwal's gold medal

உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால்-க்கு தங்கப்பதக்கம்

உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால்-க்கு தங்கப்பதக்கம்
உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் தங்கப்பதக்கம் வென்றார்.
சாங்வான்,

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் 564 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். செர்பியா வீரர் டாமிர் மிகெச் 562 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், தென்கொரியா வீரர் டாமையுங் லீ 560 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

இந்திய வீரர் ஜிதுராய் (552 புள்ளிகள்) 17-வது இடமே பெற்றார். இதன் அணிகள் பிரிவில் ஓம் பிரகாஷ் மிதர்வால், ஜிதுராய், மன்ஜித் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-வது இடம் பெற்றது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் மானு பாகெர் 13-வது இடத்துக்கும், ஹீனா சித்து 29-வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர். இதன் அணிகள் பிரிவில் மானுபாகெர், ஹீனா சித்து, ஸ்வேதா சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 4-வது இடம் பெற்றது.