பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி பாராட்டு விழாவில் முதல்வரை குறைகூறி பேசிய வீராங்கனை + "||" + Asian Games medalist Divya Kakran lashes out at Arvind Kejriwal, Delhi CM offers tepid response

ஆசிய விளையாட்டு போட்டி பாராட்டு விழாவில் முதல்வரை குறைகூறி பேசிய வீராங்கனை

ஆசிய விளையாட்டு போட்டி பாராட்டு விழாவில் முதல்வரை குறைகூறி பேசிய  வீராங்கனை
ஆசிய விளையாட்டு போட்டி பாராட்டு விழாவில் முதல்வர் எந்த உதவியும் செய்யவில்லை என குறைகூறி வீராங்கனை பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 புதுடெல்லி

இந்தோனேசியாவில்  நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இதில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் பெண்கள் மல்யுத்த பிரிவில் டில்லியை சேர்ந்த திவ்யா கரண் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார். டில்லியில் நேற்று திவ்யா கரண் உள்ளிட்ட வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய திவ்யா கரண், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நேரடியாக, "கடந்த கோல்டு டெஸ்டில் நான் தங்கப்பதக்கம் வென்றபோது  நீங்கள் என் முன்னேற்றத்துக்கு உதவுவதாக வாக்களித்ததோடு சரி, அதன் பிறகு என் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்கக் கூட இல்லை. இப்போது நீங்களே எங்களுக்கு பாராட்டு விழா நடத்துகிறீர்கள்.

இந்த பாராட்டு விழாவை ஏழைக் குழந்தைகள் விளையாட்டுப் போட்டிகளில் எங்களைப் போல் முன்னேற நடத்துவதாக சொல்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு தேவையான நேரத்தில் நீங்கள் எவ்வித ஆதரவும் அளிக்கவில்லை. சரியான நேரத்தில் உதவி புரிந்தால் மட்டுமே அனைவரும் தங்கப் பதக்கம் வெல்ல முடியும்" என்று கூறினார்.

இந்த பேச்சு மேடையில் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்து பேசிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "இந்த அரசு செய்ய முயலும் அனைத்து பணிகளுக்கும் தடைகள் உண்டாக்கப்படுகிறது என்பதை நீங்கள் பத்திரிகை மூலம் தெரிந்துக் கொள்ள வேண்டும். என்னிடம் உங்களைப் போல் பல விளையாட்டு வீரர்கள் குறை சொல்லுகின்றனர்.

அவை யாவும் உண்மையே. நாங்கள் உருவாக்கும் கொள்கைகள் மற்றும் நல திட்டங்கள் பல உயர்மட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. சமீபத்திய சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பின் காரணமாகவே எங்களால் பாராட்டு விழாவையாவது நடத்த முடிகிறது" என பதில் அளித்தார்.