பிற விளையாட்டு

உலக ஸ்குவாஷ் போட்டி இந்திய அணி வெற்றி + "||" + World squash match Indian team win

உலக ஸ்குவாஷ் போட்டி இந்திய அணி வெற்றி

உலக ஸ்குவாஷ் போட்டி இந்திய அணி வெற்றி
உலக பெண்கள் அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள டாலியன் நகரில் நடந்து வருகிறது.

டாலியன், 

உலக பெண்கள் அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள டாலியன் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சீனாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. இந்திய அணி முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டு இருந்தது. இந்திய அணியில் சுனய்னா குருவில்லா, தன்வி கண்ணா, அபரஜிதா ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.