பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற 12 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3¾ கோடி ஊக்கக்தொகை + "||" + Medal in Asian Games 12 Tamilnadu Players Rs 3 crore crores incentive

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற 12 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3¾ கோடி ஊக்கக்தொகை

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற 12 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3¾ கோடி ஊக்கக்தொகை
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற 12 தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு ரூ.3¾ கோடி ஊக்கத்தொகையை எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

சென்னை, 

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற 12 தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு ரூ.3¾ கோடி ஊக்கத்தொகையை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

ஊக்கத்தொகை

இந்தோனேஷியாவில் கடந்த ஆகஸ்டு 18–ந் தேதி முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற்ற 18–வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த 16 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடியே 20 லட்சமும், அந்த வீரர்களின் 16 பயிற்சியாளர்களுக்கு ரூ. 78 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு 12 வீரர், வீராங்கனைகள் மற்றும் 11 பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கி பாராட்டினார்.

சரத்கமல், தீபிகா கார்த்திக்

அதன்படி ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கம் வென்ற தருணுக்கு ரூ.60 லட்சம், ஸ்குவாஷ் போட்டியின் பெண்கள் அணிகள் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கத்தையும் வென்ற தீபிகா கார்த்திக் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம், ஸ்குவாஷ் ஆண்கள் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ஹரிந்தர் பால் சிங் சந்துக்கு ரூ.20 லட்சம், ஆண்களுக்கான பாய்மர படகு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம், டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் அணிகள் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற சரத்கமலுக்கு ரூ.40 லட்சம், டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற சத்யன் மற்றும் அமல்ராஜ் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம், ஆண்கள் ஆக்கி போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ரூபிந்தர் பால் சிங் மற்றும் ஸ்ரீஜேஷ் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம், பெண்களுக்கான பாய்மர படகு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வர்ஷா கவுதமுக்கு ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடியே 70 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்களான ராமச்சந்திரன், குன்ஹி முகமது, அழகேசன், ஏ.பார்த்திபன், பி.பாலமுருகன், ஏ.சீனிவாசராவ், ஏ.முரளிதரராவ், எஸ்.ராமன், அந்தோணி அற்புதராஜ், ஹர்மன் பிரீத்சிங், கே.எச்.ஷான் ஆகியோருக்கு ரூ.51 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.