பிற விளையாட்டு

மலேசிய பேட்மிண்டன் வீரர் லீ சோங் வெய் புற்றுநோயால் பாதிப்பு + "||" + Malaysian badminton player Le Chong Wei has been affected by cancer

மலேசிய பேட்மிண்டன் வீரர் லீ சோங் வெய் புற்றுநோயால் பாதிப்பு

மலேசிய பேட்மிண்டன் வீரர் லீ சோங் வெய் புற்றுநோயால் பாதிப்பு
மலேசிய பேட்மிண்டன் வீரர் லீ சோங் வெய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர்,

மலேசியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரரும், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரருமான லீ சோங் வெய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்காமல் விலகிய லீ சோங் வெய் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் அவர் மூக்கில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், நோயின் தாக்கம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், அதற்கு தைவானில் சிகிச்சை பெறுவதாகவும் மலேசிய பேட்மிண்டன் சங்கம் நேற்று தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் மூன்று வெள்ளிப்பதக்கம் வென்றவரும், காமன்வெல்த் போட்டி சாம்பியனுமான 35 வயதான லீ சோங் வெய், மொத்தம் 69 சர்வதேச பட்டங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.