கிரிக்கெட்

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
இங்கிலாந்து கிரிக்கெட்டின் இயக்குனராக பணியாற்றிய ஆன்ட்ரூ ஸ்டிராஸ் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

* இங்கிலாந்து கிரிக்கெட்டின் இயக்குனராக 3½ ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டிராஸ் அந்த பொறுப்பில் இருந்து நேற்று விலகினார். அவரது மனைவி ரூத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக ஸ்டிராஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லாண்ட் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பொறுப்புக்கு கெவின் ராபர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* புளோம்பாண்டீனில் நேற்று நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 47.3 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இரண்டு ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 60 ரன்கள் எடுத்தார். அவர் அரைசதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 24 ஓவர்களில் 78 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ‘ஹாட்ரிக்’ உள்பட 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரைகுறை அறிக்கை தாக்கல் பள்ளி கல்வித்துறை செயலாளர், இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் பள்ளி தொடர்பான வழக்கில் அரைகுறையாக அறிக்கை தாக்கல் செய்ததால், பள்ளி கல்வித்துறை செயலாளர், இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு மயிலாப்பூரை அதிர வைத்த ‘பறை’ முழக்கம் இயக்குனர் பா.ரஞ்சித் தொடங்கிவைத்தார்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ‘பறை முழக்கம்’ மயிலாப்பூரை நேற்று அதிர செய்தது. சமூக விழிப்புணர்வுக்காக இயக்குனர் பா.ரஞ்சித் நடத்திய இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...