பிற விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டு போட்டி; ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தங்கம் வென்றார் + "||" + Javelin thrower Sandeep opens India's gold account at 3rd Asian Para Games

ஆசிய பாரா விளையாட்டு போட்டி; ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தங்கம் வென்றார்

ஆசிய பாரா விளையாட்டு போட்டி; ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தங்கம் வென்றார்
இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

ஜகர்த்தா,

இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.  மாற்று திறனாளிகள் கலந்து கொள்ளும் இதில் இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டி ஒன்றில் இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி 60.01 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.

அவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் சமிந்தா சம்பத் ஹெட்டி 59.32 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.  ஈரான் நாட்டின் ஒமிடி அலி 58.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றுள்ளார்.

இந்த விளையாட்டு போட்டிகளில் இந்தியா நேற்று 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்றது.  இந்த நிலையில் முதன்முறையாக இந்தியா தங்க பதக்க கணக்கினை தொடங்கியுள்ளது.