பிற விளையாட்டு

இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார் + "||" + Shuttler Lakshya stumbles in final hurdle, settles for silver in Youth Olympics

இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார்

இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார்
இந்தோனேசியாவில் நடந்து வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையரில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார்.
பியூனஸ் அயர்ஸ்,

இந்தோனேசியாவில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்சயா சென் மற்றும் சீனாவின் லி ஷிபெங் விளையாடினர்.

இந்த போட்டியில் ஜூனியர் ஆசிய சாம்பியனான சென் 15-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் ஷிபெங்கிடம் தோல்வி அடைந்துள்ளார்.  கடந்த ஜூலையில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் நேர் செட் கணக்குகளில் சென், ஷிபெங்கை வென்றார்.

இந்நிலையில் 42 நிமிடங்கள் நடந்த இளையோர் ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் இறுதி போட்டியில் ஷிபெங் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.  இந்த போட்டியில் சென் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகளவில் அதிக சம்பளம் பெரும் வீராங்கனைகள் பட்டியல் இந்தியாவின் பி.வி.சிந்து
உலகளவில் அதிக சம்பளம் பெரும் டாப்-100 விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
2. சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி வெளியேற்றம்
சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் போட்டியில், இந்திய அணி வெளியேறியது.
3. நியூசிலாந்து பேட்மிண்டனில் பிரனாய் தோல்வி
நியூசிலாந்து பேட்மிண்டனில் பிரனாய் தோல்வியடைந்தார்.