பிற விளையாட்டு

இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயா சென் வெள்ளிப்பதக்கம் வென்றார் + "||" + Junior Olympic Games: Indian badminton player Lakshya Sen Silver won

இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயா சென் வெள்ளிப்பதக்கம் வென்றார்

இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயா சென் வெள்ளிப்பதக்கம் வென்றார்
3–வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது.

பியூனஸ் அயர்ஸ், 

3–வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், சீன வீரர் லி ஷிபெங்குடன் மோதினார். 42 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 15–21, 19–21 என்ற நேர்செட்டில் லி ஷிபெங்கிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். நடப்பு ஆசிய ஜூனியர் சாம்பியனான 17 வயது லக்‌ஷயா சென் கடந்த ஜூலை மாதம் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் கால்இறுதியில் லி ஷிபெங்கை வீழ்த்தி இருந்தார். அதற்கு அவர் நேற்று பதிலடி கொடுத்தார். இந்த போட்டி தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கம், 4 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.