பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: பாட்னா, புனே அணிகள் அபாரம் + "||" + Pro Kabaddi League: Patna and Pune are good teams

புரோ கபடி லீக்: பாட்னா, புனே அணிகள் அபாரம்

புரோ கபடி லீக்: பாட்னா, புனே அணிகள் அபாரம்
12 அணிகள் பங்கேற்றுள்ள 6–வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சோனிபட், 

12 அணிகள் பங்கேற்றுள்ள 6–வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நேற்றிரவு நடந்த 15–வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் 43–37 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாவை தோற்கடித்து 2–வது வெற்றியை பெற்றது. பாட்னா கேப்டன் பர்தீப் நார்வால் ‘ரைடு’ மூலம் 14 புள்ளிகள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) புனேரி பால்டன் அணி 45–27 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது. அரியானா அணிக்கு இது 3–வது தோல்வியாகும். போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.