1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை பல்கலைக்கழக தடகள போட்டி - இன்று தொடக்கம்


1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை பல்கலைக்கழக தடகள போட்டி - இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 23 Oct 2018 10:15 PM GMT (Updated: 23 Oct 2018 8:07 PM GMT)

1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை பல்கலைக்கழக தடகள போட்டி இன்று தொடங்க உள்ளது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51-வது தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இதில் சென்னை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 22 பந்தயங்கள் நடத்தப்படுகிறது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போட்டி நடைபெறும். மத்திய அமலாக்கத்துறை உதவி இயக்குனர் டெர்ரான்ஸ் ரோட்ரிஜோ போட்டியை தொடங்கி வைக்கிறார். பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி கலந்து கொண்டு பரிசு வழங்குகிறார். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் தெரிவித்துள்ளார்.

Next Story