பிற விளையாட்டு

து ளி க ள் + "||" + Drops

து ளி க ள்

து ளி க ள்
தேசிய சப்-ஜூனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் நடந்தது.
* நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நாளை நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 30 வயதான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் புதுமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 26 இருபது ஓவர் போட்டியில் 28 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.


* தேசிய சப்-ஜூனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் நடந்தது. இதில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழக வீரர் சங்கர் 21-16, 21-6 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அங்கிட் மோன்டலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். சங்கர் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பயர்பால் அகாடமியில் பயிற்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.

* சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஐ.சி.எப். அணி 2-1 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வே அணியை வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் ஆடிய ஐ.சி.எப். அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். தெற்கு ரெயில்வே அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்தியன் வங்கி-மத்திய கலால் வரி (பிற்பகல் 2 மணி), ஐ.ஓ.பி.-ஐ.சி.எப். (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து: அரைஇறுதியில் தமிழக அணி
தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து போட்டியில், தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.