பிற விளையாட்டு

புரோ கபடி: புனே அணி 6-வது வெற்றி + "||" + Pro Kabaddi: Pune team 6th win

புரோ கபடி: புனே அணி 6-வது வெற்றி

புரோ கபடி: புனே அணி 6-வது வெற்றி
புரோ கபடி போட்டியில், புனே அணி தனது 6-வது வெற்றியை பதிவு செய்தது.
பாட்னா,

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 31-27 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை சாய்த்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய புனே அணி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு ‘டை’ என்று மொத்தம் 37 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடம் வகிக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்களூரு புல்ஸ் அணி 43-41 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை வீழ்த்தியது. 9-வது லீக்கில் விளையாடிய பாட்னா அணிக்கு இது 6-வது தோல்வியாகும். இதில் உள்ளூரில் கண்ட 4 தோல்விகளும் அடங்கும். இன்றைய ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி, பெங்கால் வாரியர்சை (இரவு 8 மணி) சந்திக்கிறது.ஆசிரியரின் தேர்வுகள்...