பிற விளையாட்டு

புரோ கபடி: உ.பி. அணிக்கு தமிழ் தலைவாஸ் பதிலடி + "||" + Pro Kabaddi: UP The team has retaliated against Tamil Thalaivas

புரோ கபடி: உ.பி. அணிக்கு தமிழ் தலைவாஸ் பதிலடி

புரோ கபடி: உ.பி. அணிக்கு தமிழ் தலைவாஸ் பதிலடி
புரோ கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, உ.பி. யோத்தாவை சாய்த்து முந்தைய தோல்விக்கு பழிதீர்த்தது.
நொய்டா,

6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் ஏ, பி என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 3 முறை மோதுவதுடன், எதிர்பிரிவினரையும் சந்திக்க வேண்டும். ஆக ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.


இந்த நிலையில் நொய்டாவில் நேற்றிரவு அரங்கேறிய 44-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, உ.பி.யோத்தாவுடன் (பி பிரிவு) மல்லுகட்டியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ்தலைவாஸ் அணி முதல் பாதியில் 26-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பிற்பாதியிலும் அதே முன்னிலையை தக்க வைத்துக் கொண்ட தலைவாஸ் வீரர்கள், உள்ளூர் அணியை மிரள வைத்தனர்.

முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 46-24 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை தோற்கடித்தது. தலைவாஸ் அணியில் சுகேஷ் ஹெக்தே, கேப்டன் அஜய் தாகூர் ரைடு மூலம் தலா 9 புள்ளிகள் வீதம் எடுத்து வெற்றியை சுலபமாக்கினர். டேக்கிள்சில் மன்ஜீத் சிலார் (8 புள்ளி) அருமையாக செயல்பட்டார். தலைவாஸ் அணி ஏற்கனவே சென்னையில் நடந்த தொடக்க லீக்கில் உ.பி.யோத்தாவிடம் 32-37 என்ற புள்ளி கணக்கில் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு இப்போது அவர்களது ஊரிலேயே தலைவாஸ் வீரர்கள் பதிலடி கொடுத்து விட்டனர். 9-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். உ.பி.யோத்தா சந்தித்த 4-வது தோல்வியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 36-25 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது.

இன்றைய ஆட்டங்களில் யு மும்பா-புனேரி பால்டன் (இரவு 8 மணி), உ.பி.யோத்தா-பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி: இறுதிப்போட்டியில் பெங்களூரு புல்ஸ்
புரோ கபடி தொடரின் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு புல்ஸ் அணி தகுதிபெற்றது.
2. புரோ கபடி: மும்பை அணி வெளியேற்றம்
புரோ கபடி தொடரில், உ.பி.யோத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வி அடைந்து வெளியேறியது.
3. புரோ கபடி: உ.பி.யோத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் நடப்பு சாம்பியன் பாட்னா வெளியேறியது
புரோ கபடியில் உ.பி. யோத்தா அணி கடைசி லீக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் வெளியேறியது.
4. புரோ கபடி: பாட்னா பைரட்ஸ் அணி 11-வது தோல்வி
புரோ கபடி லீக் தொடரில், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி 11-வது தோல்வியை சந்தித்தது.
5. புரோ கபடியில் கடைசி ஆட்டத்தை ‘டை’யுடன் முடித்தது தமிழ் தலைவாஸ்
புரோ கபடியில் தமிழ்தலைவாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் (சமன்) முடிந்தது.