உலக ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: 13 தங்கம் வென்று வரலாறு படைத்தார், சிமோன் பைல்ஸ்


உலக ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: 13 தங்கம் வென்று வரலாறு படைத்தார், சிமோன் பைல்ஸ்
x
தினத்தந்தி 2 Nov 2018 11:24 PM GMT (Updated: 2 Nov 2018 11:24 PM GMT)

உலக ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில், சிமோன் பைல்ஸ் 13 தங்கம் வென்று வரலாறு படைத்தார்.

டோகா,

உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் அணிகள் மற்றும் ஆல்-ரவுண்ட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்திய அமெரிக்க இளம் வீராங்கனை சிமோன் பைல்ஸ், நேற்று தனிநபர் வால்ட் பிரிவிலும் அந்தரத்தில் பல்டி அடித்து பிரமிக்க வைத்தார். முடிவில் 15.366 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த 21 வயதான பைல்ஸ் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

21 வயதான சிமோன் பைல்ஸ், உலக பந்தயத்தில் வெல்லும் 13-வது தங்கம் இதுவாகும். இதன் மூலம் உலக ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் அதிக தங்கம் வென்று சாதித்த பெலாரஸ் நாட்டு வீரர் விடாலி ஸ்செர்போவின் (12 தங்கம்) 22 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்தார்.


Next Story