பிற விளையாட்டு

இந்திய கைப்பந்து சம்மேளன தலைவருக்கு பாராட்டு விழா + "||" + இந்திய கைப்பந்து சம்மேளன தலைவருக்கு பாராட்டு விழா

இந்திய கைப்பந்து சம்மேளன தலைவருக்கு பாராட்டு விழா

இந்திய கைப்பந்து சம்மேளன தலைவருக்கு பாராட்டு விழா
இந்திய கைப்பந்து சம்மேளன தலைவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னை,

இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதற்கு இந்திய கைப்பந்து சம்மேளன தலைவரும், தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவருமான எஸ்.வாசுதேவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராம்அவ்தார் சிங் ஜாக்கர், தமிழ்நாடு கைப்பந்து சங்க அசோசியேட் செயலாளர்கள் ஜெ.நடராஜன், எம்.பிரபாகரன், தேசிய பயிற்சியாளர் ஜி.இ.ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்திய கைப்பந்து சம்மேளனத்துக்கு எதிராக செயல்படும் கர்நாடக கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் நந்தகுமாரை அந்த பதவியில் இருந்து நீக்குவது என்றும் கர்நாடக கைப்பந்து சங்கத்தை இடைநீக்கம் செய்வதுடன் சங்கத்தை நிர்வகிக்க இடைக்கால கமிட்டியை அமைக்க கர்நாடக ஒலிம்பிக் சங்கத்துக்கு சிபாரிசு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், இந்திய கைப்பந்து சம்மேளன தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற எஸ்.வாசுதேவனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.


ஆசிரியரின் தேர்வுகள்...