பிற விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2–வது சுற்றுக்கு தகுதி + "||" + Chinese Open Badminton: Indian batsman Srikanth qualifies for 2nd round

சீன ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2–வது சுற்றுக்கு தகுதி

சீன ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2–வது சுற்றுக்கு தகுதி
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது.

புஜோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21–12, 21–16 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் லூகாஸ் கோர்வீயை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 11–21, 14–21 என்ற நேர்செட்டில் இந்தோனேஷிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.