பிற விளையாட்டு

புரோ கபடி: அரியானாவை வென்றது டெல்லி + "||" + Pro Kabaddi: Delhi has won the Haryana

புரோ கபடி: அரியானாவை வென்றது டெல்லி

புரோ கபடி: அரியானாவை வென்றது டெல்லி
12 அணிகள் இடையிலான 6–வது புரோ கபடி லீக் கபடி திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

நொய்டா,

12 அணிகள் இடையிலான 6–வது புரோ கபடி லீக் கபடி திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்றிரவு நடந்த 52–வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) தபாங் டெல்லி அணி 39–33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை சாய்த்து 3–வது வெற்றியை பதிவு செய்தது. 11–வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணிக்கு இது 8–வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்களூரு புல்ஸ் அணி 37–27 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோத்தாவை வீழ்த்தி 6–வது வெற்றியை ருசித்தது.

மும்பையில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் யு மும்பா (மும்பை அணி)– ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), பெங்கால் வாரியர்ஸ்–தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.