பிற விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி + "||" + Chinese Open Badminton: Sindhu and Srikanth qualify for quarter finals

சீன ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி

சீன ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது.

புஜோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21–12, 21–15 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீராங்கனை பூசனனை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 10–21, 21–9, 21–9 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் டாமி சுஜியர்டோவை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.


ஆசிரியரின் தேர்வுகள்...