பிற விளையாட்டு

மாநில பள்ளி தடகளம்: சென்னை வீராங்கனை தபிதா 4 தங்கப்பதக்கம் வென்றார் + "||" + State School Athletic: Dhabita won the gold medal in Chennai

மாநில பள்ளி தடகளம்: சென்னை வீராங்கனை தபிதா 4 தங்கப்பதக்கம் வென்றார்

மாநில பள்ளி தடகளம்: சென்னை வீராங்கனை தபிதா 4 தங்கப்பதக்கம் வென்றார்
மாநில பள்ளி தடகளப் போட்டியில், சென்னை வீராங்கனை தபிதா 4 தங்கப்பதக்கங்களை வென்றார்.
சென்னை,

61-வது குடியரசு தின மாநில அளவிலான பள்ளி தடகள போட்டி நெய்வேலியில் உள்ள பாரதி ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது. இதில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி.எம்.தபிதா 100 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப் ஆகிய பந்தயங்களில் தங்கப்பதக்கம் வென்றார். அவர் நீளம் தாண்டுதலில் 5.90 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையும் படைத்தார். தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.