பிற விளையாட்டு

புரோ கபடி: தமிழ்தலைவாஸ்-அரியானா ஆட்டம் ‘டை’ + "||" + Pro Kabaddi: Tamil Thalaiyavas-Haryana Match 'die'

புரோ கபடி: தமிழ்தலைவாஸ்-அரியானா ஆட்டம் ‘டை’

புரோ கபடி: தமிழ்தலைவாஸ்-அரியானா ஆட்டம் ‘டை’
புரோ கபடி போட்டியில், தமிழ்தலைவாஸ் மற்றும் அரியானா அணிகளுக்கிடையேயான ஆட்டம் சமனில் முடிந்தது.
மும்பை,

6-வது புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய 62-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்சை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் தலைவாஸ் ஆதிக்கம் செலுத்தியது. 11-5 என்ற கணக்கில் முன்னிலை வகித்த தலைவாஸ் அணி, ஆல்-அவுட் ஆனதும் பின்னடைவுக்குள்ளானது. இதன் பிறகு அரியானாவின் பிடி ஓங்கியது. முதல் பாதியில் அரியானா 19-15 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.


பிற்பாதியில் பதிலடி கொடுத்த தலைவாஸ் வீரர்கள் படிப்படியாக சரிவில் இருந்து எழுச்சி பெற்றனர். எதிரணியை ஆல்-அவுட் செய்ததுடன் 3 நிமிடங்கள் எஞ்சியிருந்த போது தலைவாஸ் அணி 31-29 என்ற கணக்கில் முன்னிலை கண்டது. ஆனால் அந்த முன்னிலையை தலைவாஸ் வீரர்கள் தக்கவைத்துக் கொள்ள தவறினர். கடைசி நிமிடத்தில் அரியானா வீரர் விகாஸ் கண்டோலா ரைடு மூலம் ஒரு புள்ளி எடுத்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். பரபரப்பான இந்த ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி 32-32 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது. ரைடு செல்வதில் அட்டகாசப்படுத்திய விகாஸ் கண்டோலா 14 புள்ளிகள் எடுத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா (மும்பை அணி) 32-29 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தி 9-வது வெற்றியை பெற்றது. இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்- தபாங் டெல்லி (இரவு 8 மணி), யு மும்பா-தமிழ் தலைவாஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி: தமிழ் தலைவாஸ்-பாட்னா ஆட்டம் ‘டை’
புரோ கபடியில், தமிழ் தலைவாஸ், பாட்னா அணிகளுக்கிடையேயான ஆட்டம் சமன் ஆனது. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.
2. புரோ கபடி: புனே அணி ‘திரில்’ வெற்றி
புரோ கபடியில், அரியானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.
3. புரோ கபடி: பெங்களூரு, குஜராத் அணிகள் வெற்றி
புரோ கபடி போட்டியில், பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் வெற்றிபெற்றன.
4. புரோ கபடி: குஜராத்-பெங்களூரு ஆட்டம் ‘டை’
புரோ கபடியில், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் சமன் ஆனது.
5. புரோ கபடி: பெங்காலை வென்றது குஜராத்
புரோ கபடியில், பெங்காலை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றிபெற்றது.

அதிகம் வாசிக்கப்பட்டவை