பிற விளையாட்டு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 4–வது வெற்றி தெலுங்கு டைட்டன்சை பழிதீர்த்தது + "||" + Pro Kabaddi: Tamil Team's 4th win Telugu titanas Revenge

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 4–வது வெற்றி தெலுங்கு டைட்டன்சை பழிதீர்த்தது

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 4–வது வெற்றி தெலுங்கு டைட்டன்சை பழிதீர்த்தது
12 அணிகள் இடையிலான 6–வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஆமதாபாத், 

12 அணிகள் இடையிலான 6–வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 72–வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழ் தலைவாஸ் அணி 27–23 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. தமிழ் தலைவாஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஜய் தாக்கூர் 8 புள்ளிகளும், சுகேஷ் ஹெட்ஜ் 5 புள்ளிகளும் எடுத்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். இதன் மூலம் ஏற்கனவே தெலுங்கு அணியிடம் 28–33 என்ற புள்ளி கணக்கில் அடைந்த தோல்விக்கு தலைவாஸ் அணி பழிதீர்த்துக் கொண்டது. 12–வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 4–வது வெற்றியாகும். தெலுங்கு அணி சந்தித்த 4–வது தோல்வியாகும்.

இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்–தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்– யு மும்பா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.