பிற விளையாட்டு

தேசிய இளையோர் விளையாட்டு போட்டிக்கான தமிழக கைப்பந்து அணிகள் தேர்வு சென்னையில் நடக்கிறது + "||" + Tamil Volleyball teams are selected Going on in Chennai

தேசிய இளையோர் விளையாட்டு போட்டிக்கான தமிழக கைப்பந்து அணிகள் தேர்வு சென்னையில் நடக்கிறது

தேசிய இளையோர் விளையாட்டு போட்டிக்கான தமிழக கைப்பந்து அணிகள் தேர்வு சென்னையில் நடக்கிறது
‘கேலோ இந்தியா’ இளையோர் (21 வயதுக்கு உட்பட்டோருக்கான) விளையாட்டு போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 14–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை, 

‘கேலோ இந்தியா’ இளையோர் (21 வயதுக்கு உட்பட்டோருக்கான) விளையாட்டு போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 14–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து அணி தேர்வு சென்னையில் வருகிற 25–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. ஆண்கள் அணி தேர்வு நேரு ஸ்டேடியத்திலும், பெண்கள் அணி தேர்வு நேரு பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது. 1.1.1998–ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம். இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்–வீராங்கனைகள் உரிய வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.