பிற விளையாட்டு

மாநில ஜூனியர் கைப்பந்து போட்டிக்கான சென்னை மாவட்ட அணிகள் நாளை மறுநாள் தேர்வு + "||" + Chennai District teams for the state junior volleyball tournament selected the day after tomorrow

மாநில ஜூனியர் கைப்பந்து போட்டிக்கான சென்னை மாவட்ட அணிகள் நாளை மறுநாள் தேர்வு

மாநில ஜூனியர் கைப்பந்து போட்டிக்கான சென்னை மாவட்ட அணிகள் நாளை மறுநாள் தேர்வு
மாநில ஜூனியர் கைப்பந்து போட்டிக்கான சென்னை மாவட்ட அணிகள், நாளை மறுநாள் தேர்வு செய்யப்பட உள்ளது.
சென்னை,

44-வது மாநில ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சேலம் மேட்டுபட்டியில் வருகிற 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து அணி தேர்வு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (1-ந் தேதி) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. 1-1-2001-க்கு பிறகு பிறந்தவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள். இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்கனைகள் தகுந்த வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.