துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 30 Nov 2018 9:53 PM GMT (Updated: 30 Nov 2018 9:53 PM GMT)

இந்திய மல்யுத்த சம்மேளனம் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்முறையாக ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

* இலங்கை கிரிக்கெட் அணி விரைவில் நியூசிலாந்துக்கு சென்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்த மீண்ட இலங்கை கேப்டன் சன்டிமால் அணிக்கு திரும்பியுள்ளார். கருணாரத்னே, துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

* இந்திய மல்யுத்த சம்மேளனம் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்முறையாக ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ‘ஏ’ கிரேடில் உலக மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான பஜ்ரங் பூனியா, காமன்வெல்த் மற்றும் ஆசிய சாம்பியனான வினேஷ் போகத், பூஜா தன்டா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஊதியமாக கிடைக்கும். ரூ.20 லட்சம் ஊதியம் வழங்கப்படும் ‘பி’ கிரேடில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான சுஷில்குமார், சாக்‌ஷி மாலிக் ஆகியோர் உள்ளனர். இதே போல் சி கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.10 லட்சமும், டி பிரிவுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும். இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்து வீரர்களுக்கான ஒப்பந்த முறையை மல்யுத்த சம்மேளனம் தான் கொண்டு வந்துள்ளது.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு பெங்களூருவில் நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை தோற்கடித்தது. உதான்டா சிங் (11-வது நிமிடம்), ராகுல் பெகே (88-வது நிமிடம்) ஆகியோர் பெங்களூரு அணியில் கோல் போட்டனர். புனே அணிக்கு 15-வது நிமிடத்தில் ராகுல் பெகே மூலம் சுயகோல் கிடைத்தது. இந்த சீசனில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, ஒரு டிரா என்று 22 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.


Next Story