பிற விளையாட்டு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ்-பாட்னா ஆட்டம் ‘டை’ + "||" + Pro Kabaddi: Tamil Thalaiwaz-Patna Match 'Die'

புரோ கபடி: தமிழ் தலைவாஸ்-பாட்னா ஆட்டம் ‘டை’

புரோ கபடி: தமிழ் தலைவாஸ்-பாட்னா ஆட்டம் ‘டை’
புரோ கபடியில், தமிழ் தலைவாஸ், பாட்னா அணிகளுக்கிடையேயான ஆட்டம் சமன் ஆனது. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.
புனே,

6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 90-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சுடன் மோதியது. திரிலிங்கான இந்த ஆட்டம் 35-35 என்ற புள்ளி கணக்கில் ‘டை’யில் (சமன்) முடிந்தது. கடைசி நிமிடத்தில் பாட்னா கேப்டன் பர்தீப் நார்வல் ரைடில் ஒரு புள்ளி எடுத்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினர். ரைடில் கலக்கிய தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்கூர் 16 புள்ளிகள் சேர்த்தார்.


இன்னொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 48-35 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை சாய்த்து 6-வது வெற்றியை சுவைத்தது. இன்றைய ஆட்டத்தில் தபாங் டெல்லி-யு மும்பா (இரவு 8 மணி) அணிகள் சந்திக்கின்றன.