பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
57-வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி உத்தரபிரதேசத்தில் நடந்து வருகிறது.
* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பஹார் ஜமான் கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் வலது முழங்காலில் காயம் அடைந்தார். காயத்துக்கு சிகிச்சை பெற்ற பஹார் ஜமான், நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடினார். இதனால் காயத்தின் தாக்கம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இருந்து விலகினார். அடுத்து பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்கா சென்று 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட இருக்கிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. பஹார் ஜமானின் காயம் குணமடைய 3 முதல் 5 வாரம் பிடிக்கும் என்று தெரிகிறது. இதனால் அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கடினமாகும்.


* 57-வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி உத்தரபிரதேசத்தில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் அரியானாவை சேர்ந்த வினேஷ் போகத் தொடர்ச்சியாக 5 வீராங்கனைகளை எளிதில் வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். வினேஷ் போகத் இந்த ஆண்டில் நடந்த ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 62 கிலோ எடைப்பிரிவில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்‌ஷி மாலிக் எல்லா சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

* 6-வது புரோ கபடி லீக் தொடரில் டெல்லியில் நேற்று இரவு நடந்த 91-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி-மும்பை அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மும்பை அணி 41-34 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை சாய்த்து 12-வது வெற்றியை ருசித்து தனது பிரிவில் (ஏ) முதலிடத்துக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் மும்பை-குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), தபாங் டெல்லி-புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.