பிற விளையாட்டு

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன துணைத்தலைவராக ரனிந்தர் சிங் தேர்வு + "||" + Raninder Singh has been chosen as the Vice President of the International Gun Shooters Federation

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன துணைத்தலைவராக ரனிந்தர் சிங் தேர்வு

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன துணைத்தலைவராக ரனிந்தர் சிங் தேர்வு
சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன துணைத்தலைவராக ரனிந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
புதுடெல்லி,

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன பொதுக்குழு கூட்டம் ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இந்திய ரைபிள் சங்க தலைவரான ரனிந்தர் சிங் 161 வாக்குகள் பெற்று 4 துணைத்தலைவர்களில் ஒருவராக தேர்வானார். இதன் மூலம் பஞ்சாப்பை சேர்ந்த 51 வயதான ரனிந்தர் சிங், சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.


‘இந்தியாவில் துப்பாக்கி சுடுதல் போட்டி வளர்ந்து வருவதற்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த பதவியை கருதுகிறேன். என் மீதான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக செயல்படுவேன்’ என்று புதிய துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரனிந்தர் சிங் உறுதி அளித்துள்ளார். சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன தலைவராக ரஷியாவை சேர்ந்த விளாடிமிர் லிசினும், பொதுச்செயலாளராக ரஷியாவின் அலெக்சாண்டர் ராதெரும் தேர்வு செய்யப்பட்டனர்.

2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் உயரிய கவுரவமான புளு கிராஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.